சபரிமலை செல்ல பிந்து வருகை: முகத்தில் மிளகாய் பொடி தூவி எதிர்ப்பு

சபரிமலை கோயிலுக்கு செல்வதற்காக கேரளா வந்துள்ள பிந்து அம்மினி மீது மிளகாய் மற்றும் மிளகு பொடியை தெளித்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
 | 

சபரிமலை செல்ல பிந்து வருகை: முகத்தில் மிளகாய் பொடி தூவி எதிர்ப்பு

சபரிமலை கோயிலுக்கு செல்வதற்காக கேரளா வந்துள்ள பிந்து அம்மினி மீது மிளகாய் மற்றும் மிளகு பொடியை தெளித்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கடந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு ஐயப்ப பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் இரு பெண்கள் முதன்முறையாக சபரிமலை சென்று வழிபாடு செய்தனர். அதில், ஒருவரான பிந்து அம்மினி என்பவர் தற்போது சபரிமலை செல்வதற்காக கேரளா வந்துள்ளார். இந்நிலையில், அவர் மீது ஒருவர் மிளகாய் மற்றும் பெப்பர் தெளித்ததாக இன்று காலை எர்ணாகுளம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மிளகாய் பொடி தூவி தாக்க முயன்ற ஐயப்ப கர்ம சமிதி அமைப்பை சேர்ந்த ஸ்ரீநாத் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP