பீகார்- மூளைக்காய்ச்சலுக்கு பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 100ஆக உயர்வு

பீகார் மாநிலம் முசாபர்நகரில் மூளை காய்ச்சல் நோய் காரணமாக உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.
 | 

பீகார்- மூளைக்காய்ச்சலுக்கு பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 100ஆக உயர்வு

பீகார் மாநிலம் முசாபர்நகரில் மூளை காய்ச்சல் நோய் காரணமாக உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் கண்டறியப்பட்டது.

பின்னர் பாதிப்புகள் அறியப்பட்ட குழந்தைகளுக்கு முசாபர்பூரில் உள்ள  ஸ்ரீகிருஷ்ணா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஸ்ரீகிருஷ்ணா மருத்துவமனை கண்காணிப்பாளர் சுனில் குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ஸ்ரீகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 83 குழந்தைகள் மூளை காய்ச்சல் நோய்க்கு இதுவரை உயிரிழந்துள்ளன.

மேலும் நகரில் உள்ள மற்றொரு அரசு மருத்துவமனையில் 17 குழந்தைகள் இறந்துள்ளன என்றார். 
இதையடுத்து முசாபர்பூர் நகரில் மூளை காய்ச்சலுக்கு இதுவரை 100 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்துள்ள குழந்தைகளின் குடும்பங்களுக்கு 4 லட்ச ரூபாயை நிவாரண உதவியாக வழங்க முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP