பீகார்: பாஜக தலைவர் அடித்து கொலை

பீகார் மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த கிராம பஞ்சாயத்து தலைவர் ஒருவர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
 | 

பீகார் மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த கிராம பஞ்சாயத்து தலைவர் ஒருவர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பீகார் மாநிலத்தில் உள்ள பெகுசராய் மாவட்டத்தில் உள்ள கிராத்பூர் என்ற கிராம பஞ்சாயத்தின் தலைவராக கோபால் சிங் என்பவர் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை அவரது வீட்டின் வெளியே அவர் உறங்கி கொண்டிருந்தார்.

அப்போது அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று இரும்பு கம்பிகள் மற்றும் உருட்டுகட்டைகளால் கொடூரமான முறையில் உறங்கி கொண்டிருந்த கோபால் சிங்கை தாக்கி கொலை செய்துள்ளனர். இன்று காலையில் அந்த வழியாக வந்தவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கொலை செய்யப்பட்டுக்கிடந்த கிடந்த கோபால் சிங்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்தவர்கள் யார் என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP