Logo

2 தொகுதிகளில் போட்டியின்றி வெற்றி பெற்ற பாரதிய ஜனதா!

வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் அருணாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றவுள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் கிழக்கு ஆலோ மற்றும் யச்சுலி தொகுதிகளில் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
 | 

அருணாச்சல பிரதேச மாநிலத்தின் 60 சட்டமன்ற தொகுதிகளுக்கு, அம்மாநிலத்தின் இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளுடன் சேர்த்து வரும் ஏப்ரல் 11ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில், அனைத்து தொகுதிகளிலும் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அம்மாநிலத்தின் கிழக்கு ஆலோ மற்றும் யச்சுலி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியின்றி  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு ஆலோ தொகுதியில் கென்டோ ஜினி மற்றும் யச்சுலி தொகுதியில் தாபா டெபிர் ஆகிய இரண்டு வேட்பாளர்களும் வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாஜக தேசிய செயலாளர் ராம் மாதவ் ட்விட்டரில், "அருணாச்சல பிரதேசத்தில் இருந்து பாரதிய ஜனதாவுக்கு வெற்றி துவங்குகிறது. சர் கென்டோ ஜினி கிழக்கு ஆலோ தொகுதியில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்" என்றார். 

மேலும், "அருணாச்சல பிரதேசத்தில் மற்றொரு வெற்றி: 16 யச்சுலி தொகுதியில் தாபா டெபிர் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். (இவை இரண்டுமே நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கான முடிவுகள்)" என்று கூறினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP