போலீசாருக்கு மது விருந்து- தப்பிச்சென்ற பலே ரவுடி

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அதிபயங்கர ரவுடிக் கும்பலின் தலைவன் நீதிமன்ற விசாரணைக்கு அழைத்து வரும் வழியில் போலீஸாரிடமிருந்து தப்பிச் சென்றதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 | 

போலீசாருக்கு மது விருந்து- தப்பிச்சென்ற பலே ரவுடி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் போலீசாருக்கு மது விருந்து கொடுத்து பிரபல ரவுடி தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு உத்தரப் பிரதேசத்தில் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டுவந்த அதிபயங்கர ரவுடிக் கும்பல்களின் தலைவன் பதான் சிங் பாட்டோ போலீஸாருக்கு பெரும் சவாலாக இருந்து வந்தான்.

இவன் சமீபத்தில் கைது செய்யப்பட்டான். எனினும் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றபோது அவன் போலீஸாரின் பிடியிலிருந்து தப்பிச் சென்றான். இது குறித்து தீவிர விசாரணை நடத்திய உயர் போலீஸ் அதிகாரிகள், பாதேகர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாட்டோ,  நீதிமன்ற விசாரணைக்காக காஜியாபாத்திற்கு அழைத்து வரப்பட்டான். 

முன்னதாக பதான் சிங் தனக்கு பாதுகாப்புக்கு வந்த போலீசாருக்கு மீரட் ஹோட்டலில் மது விருந்து அளித்துள்ளான். பின் போலீசாரிடம் இருந்து தப்பிச்சென்றுள்ளான் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக விளக்கமளித்துள்ளனர்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட 6 போலீசார் மற்றும் பாட்டோவின் கூட்டாளிகள் 3 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ரவுடிக் கும்பலின் தலைவன் கடும் போலீஸ் காவலையும் மீறி தப்பிச் சென்ற சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP