முன்னாள் முதல்வருக்கு ஜாமீன்!
ஐஆர்சிடிசி ஒப்பந்த முறைகேடு வழக்கில், பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் வழக்கி, டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
Mon, 28 Jan 2019
| ஐஆர்சிடிசி ஒப்பந்த முறைகேடு வழக்கில், பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் வழக்கி, டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கும் இந்த வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
லாலு பிரசாத் யாதவ் ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐஆர்சிடிசி) பணிகள் தொடர்பான ஒப்பந்தங்களை தனியாருக்கு வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாக அவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இவ்வழக்கில் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் ஜாமீன் கோரி, டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
newstm.in
newstm.in