மசூதிகளின் மீது தாக்குதல்: கேரளத்தில் மதக் கலவரத்தை தூண்ட கம்யூனிஸ்ட்டுகள் சூழ்ச்சி!

கேரள மாநிலத்தில் மசூதிகளின் மீது தாக்குதல் நடத்திவிட்டு, அதற்கான பழியை சங்பரிவார் அமைப்புகளின் மீது சுமத்தி, அதன் மூலம் அங்கு மதக் கலவரத்தை தூண்டும் நோக்கில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயல்பட்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.
 | 

மசூதிகளின் மீது தாக்குதல்: கேரளத்தில் மதக் கலவரத்தை தூண்ட கம்யூனிஸ்ட்டுகள் சூழ்ச்சி!

கேரள மாநிலத்தில் மசூதிகளின் மீது தாக்குதல் நடத்திவிட்டு, அதற்கான பழியை சங்பரிவார் அமைப்புகளின் மீது சுமத்தி, அதன் மூலம் அங்கு மதக் கலவரத்தை தூண்டும் நோக்கில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செயல்பட்டுள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சபரிமலை சன்னிதானத்துக்குள் போலீசார் உதவியுடன் இரண்டு பெண்கள் முறைகேடாக நுழைய வைக்கப்பட்டதைக் கண்டித்து, அங்கு கடந்த 3 -ஆம் தேதி மாநிலம் தழுவிய முழுஅடைப்புப் போராட்டம் நடைபெற்றது. சபரிமலை கர்மா சமிதி அமைப்பின் சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

அப்போது மாநிலத்தின் பல இடங்களில் அரங்கேறிய வன்முறை சம்பவங்களின்போது, ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரெளடிகள், சபரிமலை கர்மா சமிதி உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்த அப்பாவிகளின் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினர்.

அத்துடன் போராட்ட களத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, மாநிலத்தில் முஸ்லிம் சமூகத்தினர் அதிகமுள்ள பகுதிகளில் மசூதிகளை இந்த கும்பல் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியது. ஆனால், இந்த செயலில் ஈடுபட்டது சங்பரிவார் அமைப்புகள் தான் என வதந்தியும் பரப்பியது.

இருதரப்பினருக்கும் இடையே மதக் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்குடன் பரப்பப்பட்ட இந்த வதந்தி, மாநிலம் முழுவதும் காட்டுத் தீ போல் பரவியது.

இந்த நிலையில், ஒரு குறிப்பிட்ட பகுதியில் மசூதியை சேதப்படுத்தியது தொடர்பான வழக்கில் அப்பகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கிளைச் செயலாளர் அதுல் தாஸ் மற்றும் இக்கட்சியைச்  சேர்ந்த  20 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இதன் மூலம், சபரிமலை பிரச்னையை திசைத் திருப்ப, அங்கு மத கலவரத்தை தூண்டும்  நோக்குடன் கம்யூனிஸ்ட் கட்சியினர் சதித் திட்டம் தீட்டி செயல்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP