அஸ்ஸாம்: 3 சகோதரிகளை நிர்வாணமாக்கி கொடுமை செய்த 2 காவலர்கள் பணியிடை நீக்கம்

அஸ்ஸாமில் விசாரணைக்காக அழைத்து சென்ற 3 சகோதரிகளை காவல்துறையினர் நிர்வாணமாக்கி சித்திரவதை செய்தாக அளித்த புகாரின் பேரில் 2 போலீசார் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
 | 

அஸ்ஸாம்: 3 சகோதரிகளை நிர்வாணமாக்கி கொடுமை செய்த 2 காவலர்கள் பணியிடை நீக்கம்

அஸ்ஸாமில் விசாரணைக்காக அழைத்து சென்ற 3 சகோதரிகளை காவல்துறையினர் நிர்வாணமாக்கி சித்திரவதை செய்தாக அளித்த புகாரின் பேரில் 2 போலீசார் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

அஸ்ஸாம் மாநிலம், சிபாஜர் காவல் நிலையத்தில் 3 சகோதரிகள் அளித்த புகாரைத் தொடர்ந்து தர்ராங் மாவட்டத்தின் புர்ஹா புறக்காவல் நிலைய பொறுப்பாளர் மற்றும் ஒரு பெண் போலீஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்த 3 சகோதரிகளும் அஸ்ஸாமில் உள்ள ஒரு உள்ளூர் செய்தி சேனல் ஒன்றில் தங்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை கூறியதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து பாதிக்கப்பட்ட சகோதரிகளில் ஒருவர் கூறுகையில், " தனது சகோதரர் பெண்ணை கடத்தி சென்றதாக ஓடி போன பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சகோதரர் மீது புர்ஹா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், தனது சகோதர் குறித்து தெரிந்துகொள்வதற்காக செப்.9 ஆம் தேதி  தனது கணவர் மற்றும்  இரண்டு சகோதரிகளுடன் குவஹாத்தியின் சட்கான் வட்டாரத்தில் உள்ள இல்லத்தில் இருந்து போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். 

செப் 10 ஆம் தேதி சகோதரிகளில் ஒருவரான இல்லத்தரசி மற்றும் அவரது கணவர் இருவரும் போலீசார் தங்களை விசாரணைக்கு அழைத்து சென்று நிர்வாணமாக்கி துப்பாக்கி முனையில் சித்தரவதை செய்ததாக டாராங்கின் காவல்துறை கண்காணிப்பாளர் அமிர்த் புயானிடம் புகார் அளித்தனர். 

இதையடுத்து, புர்ஹா புறக்காவல் நிலைய பொறுப்பாளர் மகேந்திர சார்மா, பெண் கான்ஸ்டபிள் பினிதா போரோ ஆகிய இருவரையும் இடைநீக்கம் செய்த அஸ்ஸாம் காவல்துறையினர் இதுகுறித்து 2 போலீசாரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP