அசாம்- எலிக்கறி கிலோ 200 ரூபாய்

அசாம் மாநிலத்தில் மக்கள் விரும்பி சாப்பிடும் உணவாக எலிக்கறி மாறியுள்ளது. இங்கு எலிக்கறி கிலோ ரூ200க்கு விற்பனை செய்யப்படுகிறது. அங்கு காேழி மற்றும் பன்றி கறியை தான் மக்கள் பொதுவாக அதிகம் விரும்பி சாப்பிட்டு வந்தார்கள்
 | 

அசாம்- எலிக்கறி கிலோ 200 ரூபாய்

அசாம் மாநிலத்தில் மக்கள் விரும்பி சாப்பிடும் உணவாக எலிக்கறி மாறியுள்ளது. இங்குள்ள  எலிக்கறி, காேழிக்கறி போல கிலோ ரூ200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அசாம் மாநிலத்தில் குமரி கட்டா என்ற கிராமம் உள்ளது. அங்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சந்தை நடைபெறும், உணவு பொருட்கள், காய்கறிகள், மாமிசங்கள், வீட்டிற்கு தேவையான பொருட்கள் என அனைத்தும் அந்த சந்தையில் கிடைக்கும். 

அந்த பகுதிகளில் காேழிக்கறி மற்றும் பன்றி கறியை தான் மக்கள் அதிகம் விரும்பி சாப்பிட்டு வந்தார்கள். இந்நிலையில் தற்போது எலிக்கறியும் அங்கு பிரபலமாகியுள்ளது. 

பொதுவாக அந்த ஊர்களில் உள்ள விவசாயிகள் தங்கள் விளைநிலங்களை நாசம் செய்யும் எலிகளை வேட்டையாடி அங்கேயே சுட்டு சாப்பிட்டுவார்களாம். ஆனால் இந்தப் பழக்கம் நாளடைவில் எலி பிடிக்கும்  அந்த விவசாயிகள், அதன் சுவை குறித்து தங்கள் சுற்றத்தவர்களுக்கு சொல்லத் தொடங்கியதும், பலரும் வயல்களில் கிடைக்கும் எலிகளை அவர்களுக்குத் தெரிந்தவர்களை பிடித்துத் தரச்சொல்லி ருசிக்கத் தொடங்கியுள்ளனர்.

அதன் சுவை பிற இறைச்சிகளைவிட அற்புதமாக இருப்பதை அறிந்த பலர் வயல் எலிகளை சாப்பிடத் தொடங்கியுள்ளனர். இது பலருக்கும் தெரிய வந்ததும் எலியை பிடித்து சந்தைக்கு விற்பனைக்கு எடுத்து வரத்தொடங்கிவிட்டனர் அந்தப் பகுதி விவசாயிகள்.

விவசாயம் மட்டுமல்லாது எலி வியாபாரமும் அவர்களுக்கு ஓர் கூடுதல் வருமானத்ததுக்கான வாய்ப்பாக மாறியுள்ளது. இதன் காரணமாக விவசாயிகளே இரவு நேரங்களில் தங்கள் விளைநிலங்களில் தொல்லை செய்யும் எலிகளை பிடித்து மார்கெட்டிற்கு கொண்டு வந்து விற்பனை செய்ய துவங்கிவிட்டனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP