அருணாச்சல் துணை முதல்வர் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைப்பு!

அருணாச்சல் பிரதேசத்தில், பழங்குடியினருக்கு நிரந்தர குடியிருப்பு சான்றிதழ் வழங்க அரசு எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கலவரத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள், துணை முதல்வர் சவுனா மெயினின் வீட்டை தீ வைத்து எரித்தனர்.
 | 

அருணாச்சல் பிரதேச மாநிலத்தில் வசித்து வரும் வெளிமாநில பழங்குடியினருக்கு நிரந்தர குடியிருப்பு சான்றிதழ் வழங்க அம்மாநில அரசு முடிவெடுத்தது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்கள் வெடித்தன. தலைநகர் இடாநகர் மற்றும் நகர்லகுன் ஆகிய பகுதிகளில் போராட்டக்காரர்கள் இரண்டு காவல் நிலையங்களுக்கு தீ வைத்தனர். 

இதைத் தொடர்ந்து, இரண்டு பகுதிகளிலும், காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து கலவரக்காரர்கள் இன்று அம்மாநில துணை முதல்வர் சவுனா மெயினின் வீட்டுக்கு தீ வைத்தனர். பின்னர், முதல்வர் பேம கந்துவின்  இல்லத்தை நோக்கி அவர்கள் படையெடுக்க, போலீசார் தடுத்தனர். 

"நிலைமை மிக மோசமாகவும், கட்டுக்கடங்காமலும் உள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது" என உள்துறை அமைச்சர் குமார் வைய் தெரிவித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP