குழந்தைக்கு மோடியின் பெயரை சூட்டிய இஸ்லாமிய பெண்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இஸ்லாமிய பெண் தனக்கு பிறந்த குழந்தைக்கு நரேந்திர தாமோதர் தாஸ் மோடி என பெயரிட்டுள்ளார்.
 | 

குழந்தைக்கு மோடியின் பெயரை சூட்டிய இஸ்லாமிய பெண்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இஸ்லாமிய  பெண் தனக்கு பிறந்த குழந்தைக்கு நரேந்திர தாமோதர் தாஸ் மோடி என பெயரிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் பர்சப்பூர் மஹரூர் கிராமத்தில் மனேஸ் பேகம் என்ற பெண்ணுக்கு கடந்த 23ம் தேதியன்று அழகான ஆண் குழந்தை பிறந்தது. மக்களவை தேர்தல் முடிவுகளும் அன்று தான் அறிவிக்கப்பட்டது.

தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. பிரதமர் நரேந்திர மோடியின் புகழைக் கண்டு தன் குழந்தைக்கு அவரின் பெயரையே வைக்க  மனேஸ் பேகம் என்ற இஸ்லாமிய பெண் முடிவெடுத்தார். துபாயில் பணி புரியும் அவரின் கணவர் முக்தாக் அகமதுக்கு தகவல் தெரிவித்தார். 

அவரும் சம்மதித்த பின் தங்களது குழந்தையின் பெயரை கிராமத்து பஞ்சாயத்து அதிகாரியிடம் நரேந்திர தாமோதர் தாஸ் மோடி என்று பதிவு செய்துள்ளனர்.  

மனிஷ் பேகம் மோடி அரசு வழங்கிய இலவச சமையல் எரிவாயு இணைப்பு, கழிப்பறைகளைக் கட்டுவதற்கான நிதி உதவி வழங்கியது ஆகிய திட்டங்களை வெகுவாக பாராட்டியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP