மீண்டும் துணை முதலமைச்சராகிறார் அஜித் பவார்?

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசிய வாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித்பவார் மீண்டும் துணை முதலமைச்சராக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 | 

மீண்டும் துணை முதலமைச்சராகிறார் அஜித் பவார்?

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசிய வாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித்பவார் மீண்டும் துணை முதலமைச்சராக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மகராஷ்டிராவில் கடந்த ஒரு மாதகாலமாக நடைபெற்ற அரசியல் குழப்பத்திற்கு பிறகு சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சியமைக்கவுள்ளது. மும்பை சிவாஜி பார்க்கில் இன்று மாலை 6.40 மணிக்கு உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார். உத்தவ் தாக்கரேவுடன் ஒரு சிலர் மட்டுமே அமைச்சராக பதவியேற்கவுள்ளதாகவும், டிச.3ஆம் தேதிக்கு பிறகு அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. இதனிடையே நேற்றையதினம் கூட்டணி தொடர்பாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே சுமார் 6 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு துணை முதலமைச்சர் பதவியும், காங்கிரஸ்க்கு சபாநாயகர் பதவியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், பாஜகவுடன் கூட்டணி அமைத்து துணை முதலமைச்சராக பதவியேற்று பின்னர் ராஜினாமா செய்த தேசிய வாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவாருக்கே மீண்டும் துணை முதலமைச்சர் பதவி வழங்க தேசியவாத காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாகவும், அஜித் பவார் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுப்பதற்காக கூட்டணி கட்சிகளும் இதற்கு ஒப்பு கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இன்று நடைபெறும் முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் அஜித்பவார் பதவியேற்கமாட்டார் என கூறப்படுகிறது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP