ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 தொகுதிகளுக்கு 5 கட்டமாக தேர்தல் நடை பெற்று வருகிறது. இறுதி கட்ட தேர்தல் டிசம்பர் 20ல் நடக்க உள்ள நிலையில் ஜார்கண்ட் ராஜ்மகாலில் ஜேஎம்எம் வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் கூட்டம் நடைபெற்றது.
 | 

இதில் காங்கிரஸ் கட்சி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியுடன் போட்டியிடுகிறது. இந்தக் கூட்டணியை வெற்றி பெறச் செய்தால், 2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு 2,500 வரை வழங்கப்படும்.

ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி!

காங்கிரஸ் தலைமை வகிக்கும் மாநிலங்களான சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகியவற்றில் அரசு நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக 2500 வழங்கப்படுகிறது. பாஜக ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக இருக்கிறது. 500,1000 ரூபாய் பண மதிப்பு இழப்பு இன்னும் சாமான்யர்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. பாஜக பெரும் செல்வந்தர்களின் கட்சியாக பாரபட்சமாக செயல்படுகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்த நிலை மாறும். ஆகவே ,காங்கிரஸ் கூட்டணியை வெற்றிபெறச் செய்யுங்கள் என்று ராகுல் காந்தி அறைகூவல் விடுத்துள்ளார்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP