மேற்கு வங்காளத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆதிர் ரஞ்சன் ஆதரவு

ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த உறுப்பினர், குடும்பத்துடன் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதை தொடர்ந்து, மேற்கு வங்காளத்தில் குடியரசுத் தலைவரின் ஆட்சியை கொண்டுவருமாறு பலர் கூறி வரும் நிலையில், அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் ஆதிர் ரஞ்சன்.
 | 

கடந்த புதன்கிழமையன்று, ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த ஒருவர் குடும்பத்துடன் மிக கொடூரமான முறையில் கொல்லப்பட்டதை தொடர்ந்து, அந்த அமைப்பின் உறுப்பினர்கள் மேற்கு வங்காளத்தில், குடியரசுத் தலைவரின் ஆட்சியை அமல்படுத்துமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆதிர் ரஞ்சன். 

மேலும், குடியரசுத் தலைவரின் ஆட்சியை அமல்படுத்துவதை குறித்து ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் ஒருவர் கூறுகையில், "மேற்கு வங்காள மாநில ஆட்சி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படியும், ஜனநாயக முறைப்படியும் தான் நடைபெறுகிறதா என்பதை மத்திய அரசு பரிசோதிக்க வேண்டிய தருணம் இது" என்று குறிப்பிட்டுள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP