Logo

அடப்பாவத்த ...ஆட்சியை காப்பாத்திக்க ஒரு முதல்வர் இப்படியெல்லாமா யோசிப்பாரு?!

கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த வியாழக்கிழமை (ஜூலை 18 ), மாநில முதல்வர் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அன்றைய தினம் இதுதொடர்பான தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தின்போதே அமளி ஏற்பட்டதால், அவையை சபாநாயகர் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
 | 

அடப்பாவத்த ...ஆட்சியை காப்பாத்திக்க ஒரு முதல்வர் இப்படியெல்லாமா யோசிப்பாரு?!

"கர்நாடக சட்டப்பேரவையில் நாளைக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் இருக்கும் நோக்கில்,மாநில முதல்வர் குமாரசாமி தமக்கு உடல்நிலை சரியில்லையெனக் கூறி, வேண்டுமென்றே மருத்துவமனையில் சேர (அட்மிட்) நூதனமாக திட்டமிட்டுள்ளார். 

அவரது இந்த சதிக்கு கொஞ்சமும் இடம் கொடுக்காமல், நாளைக்கு கட்டாயம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கோரி, சுயேச்சை எம்எல்ஏ.,க்களான சங்கர் மற்றும் நாகேஷ் உச்ச நீதிமன்றத்தில் இன்று அவசர மனு தாக்கல் செய்துள்ளனர்.

அதேசமயம், எம்எல்ஏ.,க்களுக்கு கட்சி கொறடா உத்தரவு பிறப்பிப்பது குறித்த நீதிமன்றத்தின் கருத்துக்கு உரிய விளக்கம் கேட்டும், சட்டப்பேரவை நடவடிக்கைகளில் மாநில ஆளுநரின் தலையீட்டை தடுக்க கோரியும், கர்நாடக மாநில காங்கிரஸ் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, "கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் நாளை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் தான் கலந்து கொள்ள போவதில்லை" என்று பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏவான என்.மகேஷ் இன்று தெரிவித்துள்ளார்.

"நாளை தான் குமாரசாமி தலைமையிலான ஆட்சிக்கு கடைசி நாள்" என்று மாநில பாஜக தலைவர் எடியூரப்பா கூறியுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த வியாழக்கிழமை (ஜூலை 18 ),  மாநில முதல்வர் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அன்றைய தினம் இதுதொடர்பான தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தின்போதே அமளி ஏற்பட்டதால், அவையை சபாநாயகர் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினமும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாத நிலையில், கர்நாடக முதல்வர் குமாரசாமி, சட்டப்பேரவையில் தமது கட்சி ஆட்சியில் தொடர்வதற்கான பெரும்பான்மை பலத்தை நாளைக்காவது நிரூபிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP