போதையில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த காவல் ஆய்வாளருக்கு சிறை!!!

குடிபோதையில் பெண் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற பீகார் மாநில போலீஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.
 | 

போதையில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த காவல் ஆய்வாளருக்கு சிறை!!!

குடிபோதையில் பெண் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற பீகார் மாநில போலீஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.

பீகார் மாநில சமஸ்திபூர் மாவட்டத்தை சேர்ந்த காடாஹோ காவல் துறையின் கான்ஸ்டபிளான வேதானந்த் சௌதரி, குடிபோதையில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த குற்றத்துக்காக வழக்குபதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டிருந்த பீகார் மாநில போலீசார், வேதானந்த் மீது ஏற்கனவே குடிபோதையுடன் பணியில் ஈடுபட்டிருந்ததற்கான வழக்குகள் பதிவாகியிருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதை தொடர்ந்து, அவர் மீது பாலியல் வழக்குகள் உள்ளதா என்பது குறித்த விசாரணையில் தற்போது ஈடுபட்டுள்ளனர். 

இதை தொடர்ந்து, குடிபோதையுடன் பணியில் ஈடுபடக்கூடாது என்ற பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமாரின் உத்தரவின் அடிப்படையிலும்  வேதானந்த் சௌதரி மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அம்மாநில போலீசார்.

Newstm.in

 

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP