தன் உயிரை கொடுத்து 7 சுற்றுலா பயணிகளை காப்பாற்றிய வழிகாட்டி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தன் உயிரை கொடுத்து 7 சுற்றுலா பயணிகளை காப்பாற்றிய வழிகாட்டியின் வீரத்தை பாராட்டி பல்வேறு தரப்பினர் தங்கள் இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.
 | 

தன் உயிரை கொடுத்து  7 சுற்றுலா பயணிகளை காப்பாற்றிய வழிகாட்டி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தன் உயிரை கொடுத்து 7 சுற்றுலா பயணிகளை காப்பாற்றிய வழிகாட்டியின் வீரத்தை பல்வேறு தரப்பினர் பாராட்டி, அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியை சேர்ந்தவர் அகமது தார். இவர் பால்காம் பகுதியில் சுற்றுலா வழிகாட்டியாக இருந்து வந்தார்.

இந்நிலையில் சுற்றுலா பயணிகள் 7 பேருடன் தார், லிடார் ஆற்றில் படகில் பயணம் செய்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர்களின் படகு ஆற்றில் கவிழ்ந்தது. இதையடுத்து, தார் ஆற்றில் தத்தளித்து கொண்டிருந்த சுற்றலா பயணிகள் 7 பேரை ஒருவர் பின் ஒருவராக பத்திரமாக மீட்டார்.

ஆனால், எதிர்பாராதவிதமாக ஏரியின் ஆழமான பகுதியில் தார் சிக்கி விட்டார். இதையடுத்து பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்து வந்து ஆற்றில் நீண்ட நேரம் தேடி பின்னர் தாரின் உயிரற்ற உடலை மீட்டனர்.

தன் உயிரை பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகளை காப்பற்றிய தாரின் வீரத்தை பல்வேறு தரப்பினர் சமூக வலைதளங்களில் பாராட்டியுள்ளனர். மேலும், அவரது மறைவுக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP