மகளின் சடலத்துடன் ஒரு மாதம் வாழ்ந்து வந்த முன்னாள் இன்ஸ்பெக்டர்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இறந்த மகளின் சடலத்துடன் முன்னாள் காவல் துறை அதிகாரி ஒரு மாதம் வாழ்ந்து வந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 | 

உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில் வசித்து வருபவர் தில்வார் சித்திக். இவரது வீடு ஹயாத் நகரில் உள்ளது. இவர்களது அக்கம் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் சித்திக் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக காவல் நிலையத்தில் தொடர்ந்து புகார் அளித்தனர்.

அதன் பேரில் போலீசார் சித்திக் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது சித்திக் மற்றும் அவரது மனைவி தங்களது மகளின் சடலத்துடன் கடந்த ஒரு மாதமாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. இதையடுத்து சித்திக்கிடம் விசாரணை நடத்திய போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

சித்திக் தனது மகள் தூங்குவதாக கூறியுள்ளார். இதையடுத்து சித்திக் மற்றும் அவரது மனைவி மனநலம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிந்த போலீசார் அவர்களது மகளின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சித்திக் மற்றும் அவரது மனைவியை மனநல மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP