மனவளர்ச்சி குன்றிய மகனுக்கு திருமணம் செய்து வைத்து மகிழ்வித்த தந்தை

குஜராத் மாநிலத்தில் மனவளர்ச்சி குறைபாடுள்ள மகனுக்கு மணமகளே இல்லாமல் திருமணம் செய்து வைத்து மகனின் ஆசையை தந்தை பூர்த்தி செய்தார்.
 | 

மனவளர்ச்சி குன்றிய மகனுக்கு திருமணம் செய்து வைத்து மகிழ்வித்த தந்தை

குஜராத் மாநிலத்தில் மனவளர்ச்சி குறைபாடுள்ள மகனுக்கு மணமகளே இல்லாமல் திருமணம் செய்து வைத்து மகனின் ஆசையை தந்தை பூர்த்தி செய்தார்.

குஜராத் மாநிலம் ஹிம்மத்நகர் பகுதியில் வசித்து வருபவர் விஷ்ணு பேரட்.  இவருடைய 27 வயது மகன் அஜய் பேரட். சிறு வயதிலேயே தன் தாயை பறிகொடுத்த இவர் மனவளர்ச்சி குறைபாடுள்ளவராகவே வளர்ந்தார்.

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்ளும் அஜய் பேரட் தனக்கும் திருமணம் செய்து வைக்கும்படி தந்தையிடம் கேட்டுள்ளார். ஆனால் தனது மகனின் நிலையை நினைத்த அவனின் தந்தை மணமகளே இல்லாமல் மகனுக்கு அவன் விருப்பப்படி திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.

இதையடுத்து திருமண நாள் முடிவு செய்யப்பட்டு உறவினர்கள் வரவழைக்கப்பட்டனர். அதன்படி உறவினர்கள் வந்தவுடன் குஜராத்தி முறைப்படி மணமகனுக்கு திருமணத்திற்கு முந்தைய நாள் மெகந்தி வைக்கப்பட்டு, இசை நிகழ்ச்சிகள் மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.

இதையடுத்து அடுத்த நாள் மணமகனுக்கு தங்க நிற செர்வாணி உடை அணவிக்கப்பட்டு, கழுத்தில் மாலையோடு 200 உறவினர்கள் புடை சூழ குதிரையில் அஜய் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். பின்னர் உறவினர்கள் உள்பட 800 பேருக்கு தடபுடலாக விருந்து பறிமாறப்பட்டது. இதையடுத்து மகனின் ஆசையை நிறைவேற்றிய தந்தை ஆனந்த கண்ணீர் வடித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP