மாரடைப்பில் உயிரிழந்த தந்தை- புத்திசாலித்தனமாக வாகனத்தை நிறுத்திய சிறுவன்

வாகனம் ஓட்டும் போது மாரடைப்பில் உயிரிழந்தவரின் மகன் புத்திசாலித்தனமாக வாகனத்தை ஓரத்தில் நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
 | 

மாரடைப்பில் உயிரிழந்த தந்தை- புத்திசாலித்தனமாக வாகனத்தை நிறுத்திய சிறுவன்

வாகனம் ஓட்டும் போது மாரடைப்பில் உயிரிழந்தவரின் மகன் புத்திசாலித்தனமாக வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

கர்நாடக மாநிலம் ஹீலியுரூ பகுதியில் உள்ள ஒரு குக்கர் தயாரிப்பு நிறுவனத்தில் வேன் ஓட்டுநராக சிவக்குமார் என்பவர் வேலை பார்த்து வந்தார்.

இன்றும் அவர் தனது வேலையில் ஈடுபட்டிருந்தார். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் சிவக்குமாரின் 10 வயது மகன் தனது தந்தையுடன் வேனில் பயணம் செய்தான். இன்று பகல் 12 மணியளவில் வேன் ஓட்டிக்கொண்டிருந்த சிவக்குமாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் வாகனத்தில் சரிந்து விழுந்தார். இதைப்பார்த்த அவரின் மகன் தந்தை இறந்து விட்டார் என்பதை அறிந்து உடனடியாக வாகனத்தை இடது பக்கம் திருப்பி சாலையோரத்தில் இருந்த தடுப்பு மீது மோதி நிறுத்தினான்.

பின்னர் அழுது கொண்டே அங்கிருந்தவர்களிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்தான். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சிறுவனின் சமயோஜித செயலை போலீசார் பாராட்டினர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP