புனே- சுவர் இடிந்து விழுந்து 6 தொழிலாளர்கள் பலி

புனேவில் கூலி தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிக தங்குமிடத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் அங்கிருந்த 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
 | 

புனே- சுவர் இடிந்து விழுந்து 6 தொழிலாளர்கள் பலி

புனேவில் கூலி தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிக தங்குமிடத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் அங்கிருந்த 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, பூனே உள்ளிட்ட பல இடங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புனேவில் உள்ள அம்பேகான் பகுதியில் கூலி தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிக தங்குமிடத்தில் இன்று அதிகாலை சுவர் இடிந்து விழுந்தது.

இதில் 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP