மஹாராஷ்டிராவில் அணை உடைந்து 6 பேர் பலி- 18 பேர் மாயம்

மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ரத்னகிரியில் உள்ள திவாரே அணையின் ஒரு பகுதி நேற்று இரவு உடைந்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
 | 

மஹாராஷ்டிராவில் அணை உடைந்து 6 பேர் பலி- 18 பேர் மாயம்

மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ரத்னகிரியில் உள்ள திவாரே அணையின் ஒரு பகுதி நேற்று இரவு உடைந்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

ரத்னகிரியில் உள்ள திவாரே அணை வேகமாக நிரம்பி வந்த நிலையில், நேற்று இரவு திடீரென அணையின் ஒரு பகுதி உடைந்து தண்ணீர் ஆக்ரோஷத்துடன் வெளியேறியது

இதன் காரணமாக, அணையின் அருகில் உள்ள 12 வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அந்த வீடுகளில் இருந்தவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அணையில் இருந்து வெளியேறிய தண்ணீர் அருகில் உள்ள 7 கிராமங்களை சூழ்ந்துள்ளது. 

இதையடுத்து மாவட்ட அதிகாரிகள், போலீசார்,  பேரிடர் மீட்புப் படையினர் ஆகியோரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 18 பேர் காணவில்லை என்றும் அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP