விபத்தில் சிக்கியவரை காப்பாற்றினால் ரூ.5000 வெகுமதி!

புதுச்சேரியில் சாலை விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக காப்பாற்றி மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5000 வெகுமதியாக வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
 | 

புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமி இன்று 2019-20 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். அதில், மீனவர்களுக்கு வழங்கப்படும் மீன்பிடித் தடைக்கால நிதியுதவி ரூ.5,500 ல் இருந்து ரூ.6,500 ஆக உயர்த்தப்படுவதாகவும், மழைக்கால நிதியுதவி ரூ. 2,500ல் இருந்து 3,000ஆக உயர்த்தி வழங்கப்படுவதாகவும் அறிவித்தார்.

புதுச்சேரியில் சாலை விபத்தில் காயமடைந்தோரை காப்பாற்றி உடனே மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5,000 வெகுமதி வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்தார். 

Newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP