சபரிமலையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு!

மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன்கோவிலில் நாளை நடை திறக்கப்படுவதையொட்டி சபரிமலையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 | 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 60 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படி மண்டல மற்றும் மகரவிளககு பூஜைக்காக நாளை மாலை 5 மணியளவில் சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் நடை திறக்கப்படுகிறது. இந்நிலையில், சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்லாம் என்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட மனு 7 பேர் கொண்ட நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், சபரிமலை வழக்கில் முந்தைய உத்தரவே செல்லும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் சபரிமலைக்கு இளம்பெண்கள் தரிசனத்திற்கு வந்தால் அங்கு பிரச்சனைகள் ஏற்படாமல் இருப்பதை தடுக்க சபரிமலையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சன்னிதானம், பம்பை, நிலக்கல் பகுதிகளில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படவுள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP