ஃபானி புயல் நாளை கரையைக் கடக்கும்... 43 ரயில்கள் ரத்து..!

ஃபானி புயல் நாளை ஒடிசா கடற்கரையைக் கடக்க உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 43 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 | 

வங்கக் கடலில் உருவாகியுள்ள பானி புயல், ஒடிசா மாநிலத்தின் தெற்கு கடலோரப் பகுதியில் நாளை (வெள்ளிக்கிழமை) கரையைக் கடக்கும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அதிதீவிர புயலாக மாறியுள்ள ஃபானி புயல், கோபால்பூர் மற்றும் சந்த்பாலி பகுதிகளுக்கு இடையேகரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், மணிக்கு 175 முதல் 185 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

ஒடிசாவில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று முதல் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பயணிகளின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  43-க்கும் மேற்பட்ட ரயில்களை தென்கிழக்கு ரெயில்வே ரத்து செய்துள்ளது

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP