ஒடிசா- லாரி வீட்டிற்குள் புகுந்து 3 பேர் பலி

ஒடிசா மாநிலத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி அருகில் இருந்த வீட்டிற்குள் புகுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
 | 

ஒடிசா- லாரி வீட்டிற்குள் புகுந்து 3 பேர் பலி

ஒடிசா மாநிலத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி அருகில் இருந்த வீட்டிற்குள் புகுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டத்தில் இன்று காலை மணல் பாரம் ஏற்றிய லாரி சென்று கொண்டிருந்தது.

பேஜிட்பட் என்ற இடத்தின் அருகே லாரி சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி அருகில் இருந்த வீட்டிற்குள் புகுந்தது. இந்த விபத்தில் வீட்டிற்குள் இருந்த கணவன், மனைவி மற்றும் அவர்களது 8 வயது மகள் ஆகியோர் லாரிக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP