ஹிமாச்சலில் 26,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகள்:மோடி பெருமிதம்

ஹிமாச்சல பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைத்து இன்றுடன் ஓராண்டு நிறைவுபெறுதையொட்டி மாநில அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
 | 

ஹிமாச்சலில் 26,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகள்:மோடி பெருமிதம்

ஹிமாச்சல பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த ஓராண்டில் 26,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

ஹிமாச்சல பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைத்து இன்றுடன் ஓராண்டு நிறைவுபெறுதையொட்‌டி, மாநில அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வியாழக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

ஹிமாச்சல பிரதேசத்தில் ஜெய்ராம் தாக்கூர் தலைமையிலான பாஜக அரசின் சாதனைகள் மற்றும் பணிகளை பாஜக பட்டியலிடும் வகையில், பல்வேறு சாதனை விளக்க நிகழ்ச்சிகளுக்கும் மாநில அரசு ஏற்பாடு செய்திருந்தது.

பிரதமர் மோடி தலைமையில், தர்மஷாலாவில் பொதுமக்கள் பங்கேற்ற பேரணி நடத்தப்பட்டது. மாநில அரசுத் திட்டங்களில் பயனடைந்த மக்களுடனும் அவர் கலந்துரையாடினார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP