20 வயது இளம்பெண்ணை கடத்திச் சென்று பலாத்காரம்! திருமணமான மூன்றே நாட்களில் நடந்த சோகம்!

விறகு எடுக்கசென்ற இளம்பெண்ணை தூக்கிச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்..
 | 

20 வயது இளம்பெண்ணை கடத்திச் சென்று பலாத்காரம்! திருமணமான மூன்றே நாட்களில் நடந்த சோகம்!

திருமணமாகி சில மாதங்களிலேயே இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் அந்த கிராம பெண்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஆந்திரா சித்திதூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயதான இளம்பெண் ஒருவருக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் தான் திருமணம் நடந்துள்ளது. மாமியார் வீட்டில் புதுப்பெண் தன் இல்லற வாழ்க்கையை ஆரம்பித்த மூன்றே நாட்களில் வாழ்க்கையையே புரட்டிப் போடுகிற அளவிற்கு துயரம் நிகழ்ந்துள்ளது. கணவருக்கு ஆசையாசையாய் சமைத்துப் போடுவதற்காக, மாமியார் வீட்டில் இருப்பவர்கள் வழக்கமாக விறகு எடுத்து வருவதைப் போல இவரும், சமையல் செய்வதற்காக வீட்டின் அருகே இருக்கும் காட்டு பகுதிக்கு விறகு எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு இரண்டு பைக்கில் மூன்று பேர் கொண்ட கும்பல் வந்துள்ளது. அவர்கள் அப்பெண்ணை வலுக்கட்டாயமாக பைக்கில் தூக்கிச் சென்றனர்.

20 வயது இளம்பெண்ணை கடத்திச் சென்று பலாத்காரம்! திருமணமான மூன்றே நாட்களில் நடந்த சோகம்!

ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்று மூன்று பெரும் சேர்ந்து அப்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பினர். இந்த நிலையில் வீட்டுக்கு அழுது கொண்டே வந்த அவர் நடந்தவற்றை குடும்பத்தில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார். பின்னர் அவர்கள் தப்பியோடிய மூவர் குறித்தும் நிம்மனப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மகேஷ், விஜய், சிவா மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP