ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
 | 

ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினரும், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளும் அத்து மீறி இந்திய நிலைகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில் பண்டிபோரா மாவட்டத்தில் உள்ள ஹாஜின் பகுதியில் தீவிரவாதிகள் இந்திய நிலைகள் மீது துப்பாக்கி சண்டை நடத்தினர். இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வந்தது. இந்திய ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டு‌க்கொல்லப்பட்டனர்.

மேலும் தீவிரவாதிகள் அந்த பகுதியில் பதுங்கியுள்ளனரா என்ற தேடுதல் வேட்டையில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP