உத்தரகாண்ட்- பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 2 பேர் பலி

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் பாலம் இடிந்து விழுந்ததில் பாலத்தில் சென்று கொண்டிருந்த வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்
 | 

உத்தரகாண்ட்- பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 2 பேர் பலி

உத்தரகாண்ட் மாநிலம் டராடூனில் பாலம் இடிந்து விழுந்ததில் பாலத்தில் சென்று கொண்டிருந்த வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அந்த வாகனத்தில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள கார்கிகான்ட் என்ற பகுதியில் ஒரு இரும்பு பாலம் உள்ளது. இன்று காலை அந்த பாலத்தின் வழியாக வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வாகனத்தில் ஓட்டுநர் உள்ளபட 5 பேர் பயணம் செய்தனர். இந்நிலயைில் அந்த இரும்பு பாலம் திடீரென இடிந்து விழுந்தது.

 இதனால் பாலத்தில் சென்று கொண்டிருந்த வாகனம் பள்ளத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தில் இருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

  தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 3 பேரை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP