கொச்சி கடற்படை தளத்தில் விபத்து- 2 பாே் பலி

கொச்சியில் உள்ள சதர்ன் நேவல் கமாண்டின் ஐ.என்.எஸ்.கருடா ஹெலிகாப்டர் நிறுத்துமிட நகரும் கதவு இன்று காலை திடீரென உடைந்து விழுந்தது, இதில் கடற்படை வீரர்கள் இருவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
 | 

கொச்சி கடற்படை தளத்தில் விபத்து- 2 பாே் பலி

கொச்சியில் உள்ள சதர்ன் நேவல் கமாண்டின் ஐ.என்.எஸ்.கருடா ஹெலிகாப்டர் நிறுத்துமிட நகரும் கதவு இன்று காலை திடீரென உடைந்து விழுந்தது, இதில் கடற்படை வீரர்கள் இருவர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

கொச்சி ஏ.எல்.எச் துருவ் ஹெலிகாப்டர்கள் நிறுத்தப்படும் கட்டிடத்தின் நகரும் கதவு அதனைத் தாங்கும் பிடிமானத்திலிருந்து நழுவி இரண்டு வீரர்கள் மேல் விழுந்தது. இருவரும் உயரதிகாரிகள் பிரிவில் பணியாற்றுபவர்கள் என்று கடற்படை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. பலியானவர்கள்  நவீன் ஹரியாணா மற்றும் அஜீத் சிங் என்பது  தெரியவந்தது.

இந்த விபத்து குறித்து கடற்படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஹெலிகாப்டர்களுக்கு எந்த வித சேதமும் ஏற்படவில்லை. விசாரணைக்குப் பிறகுதான் எப்படி அந்த நகரும் கதவு உடைந்து விழுந்தது என்பது தெரியவரும்.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP