சபரிமலையில் பெண்கள் வழிபட 2 நாட்கள் ஒதுக்கலாம் - உயர்நீதிமன்றத்தில் கேரள அரசு பதில்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்கோரி 4 இளம் பெண்கள் தாக்கல் செய்த பொதுநல மனு விசாரணையின் போது, பெண்கள் மட்டும் வழிபட 2 நாட்கள் ஒதுக்கலாம் என கேரள அரசு யோசனை தெரிவித்துள்ளது.
 | 

சபரிமலையில் பெண்கள் வழிபட 2 நாட்கள் ஒதுக்கலாம் - உயர்நீதிமன்றத்தில் கேரள அரசு பதில்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் மட்டும் வழிபட 2 நாட்கள் ஒதுக்கலாம்  என உயர்நீதிமன்றத்தில் கேரள அரசு யோசனை தெரிவித்துள்ளது. 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்கோரி, ரேஷ்மா நிஷாந்த், ஷனிலா சஜீஷ், தான்யா, சூர்யா என்ற 4 இளம் பெண்கள் கேரள உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், தாங்கள் தீவிர ஐயப்ப பக்தர்கள் என்றும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து நாங்கள் மாலை அணிந்து விரதம் கடைபிடித்து வருவதாகவும், அனைத்து வயது பெண்களும்  வழிபட வசதியாக பிரத்யேகமாக 2 அல்லது 3 நாள் ஒதுக்கி அவர்களுக்கு உரிய பாதுகாப்பும் அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு,நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்து வயது பெண்கள் மட்டும் வழிபட 2 நாட்கள் ஒதுக்கலாம் என்று அரசு தரப்பில் யோசனை தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.   

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP