Logo

அருணாச்சல்- பாஜகவின் 18 தலைவர்கள் மாற்று கட்சியில் இணைந்தனர்

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் பாஜகவின் 8 எம்எல்ஏகள், 2 அமைச்சர்கள் உள்பட 18 பேர் அக்கட்சியில் இருந்து விலகி தேசிய மக்கள் கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர்.
 | 

அருணாச்சல்- பாஜகவின் 18 தலைவர்கள் மாற்று கட்சியில் இணைந்தனர்

அருணாச்சல பிரதே மாநிலத்தில் நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பளிக்காதையடுத்து பாஜகவின் 8 எம்எல்ஏகள், 2 அமைச்சர்கள் உள்பட 18 பேர் அக்கட்சியில் இருந்து விலகி தேசிய மக்கள் கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர்.

இது குறித்து தேசிய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் தாமஸ் சங்மா கூறுகையில், உள்துறை அமைச்சர் குமார் வாய் மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் ஜர்கார் காம்லின் உள்பட 18 பாஜக தலைவர்கள் தேசிய மக்கள் கட்சியில் இணைந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அவர், பாஜகவின் கொள்கைகள் முரண்பாடானது என்றும் தங்கள் கட்சி 30 முதல் 40 இடங்களில் தனித்து போட்டியிட உள்ளதாகவும் கூறினார். தாங்கள் வெற்றி பெற்றால் தனித்தே ஆட்சி அமைப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாஜகவில் இருந்து விலகிய சுற்றுலா துறை அமைச்சர் ஜர்கார் காம்லின் கூறுகையில், பாஜக வாரிசு அரசிய‌லை பின்பற்றுகிறது என்றும் நாடு தான் தங்களுக்கு முதலானது என்றும் இரண்டாவது தான் கட்சி, மூன்றாவது தான் தலைவர்கள் என்று கூறிக்கொள்ளும் பாஜக வாரிசு அரசியலில் மூழ்கியுள்ளது என்றார்.

மேலும் அருணாச்சல பிரதேசம் மதசார்பற்ற மாநிலம், ஆனால் பாஜக இங்கு மதவாதத்தை தூண்டுகிறது. எனவே நாங்கள் பாரதிய ஜனதா கட்சியை விட்டு விலகி தேசிய மக்கள் கட்சியில் இணைந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP