பேருந்து விபத்து: 17 மாணவர்கள் காயம்!

ஆந்திர மாநிலத்தில், பள்ளிப் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 17 மாணவர்கள் காயமடைந்தனர். ஆந்திர மாநிலம், குண்டூர் அருகே இன்று காலை தனியார் பள்ளிப் பேருந்து ஒன்று பயணித்துக் கொண்டிருந்தது.
 | 

பேருந்து விபத்து: 17 மாணவர்கள் காயம்!

ஆந்திர மாநிலத்தில், பள்ளிப் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 17 மாணவர்கள் காயமடைந்தனர்.

ஆந்திர மாநிலம், குண்டூர் அருகே இன்று காலை தனியார் பள்ளிப் பேருந்து ஒன்று பயணித்துக் கொண்டிருந்தது. அந்தப் பகுதியில் ஒரு பாலத்தை கடக்க முயன்றபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது. 

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 17 மாணவர்கள் காயமடைந்தனர். இவர்களில் 2 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்துள்ள அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த விபத்து குறித்து பேருந்து ஓட்டுநரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP