மும்பை கனமழை: 16 பேர் உயிரிழப்பு

மும்பையில் நேற்று பெய்த கனமழை காரணமாக 16 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்த 2 நாட்களுக்கு மும்பையில் கனமழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், அரசு பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
 | 

மும்பை கனமழை: 16 பேர் உயிரிழப்பு

மும்பை மலார்டு பகுதியில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து 16 பேர் உயிரிழந்துள்ளனர். 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, புனே உள்ளிட்ட பல இடங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகனங்கள் செல்லமுடியாத நிலை உருவாகியுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளி, மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விமான சேவை மற்றும் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. 

மும்பை நகரின் பல இடங்களில் 20 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மலார்டு பகுதியில் சுவர் இடிந்து விழுந்து 16 பேர் உயிரிழந்துள்ளனர். அப்பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த 2 நாட்களுக்கு மும்பையில் கனமழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP