திருமண ஊர்வலத்துக்குள் லாரி புகுந்த விபத்தில் 13 பேர் பலி!

ராஜஸ்தான் மாநிலத்தில், திருமண விழா ஊர்வலம் சென்று கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர். பிரதாப்கர்க் மாவட்டத்தில் உள்ள அம்பாவலி கிராமத்தில் உள்ள மண்டபத்தில் திருமண விழா நடைபெற்று வந்தது.
 | 

திருமண ஊர்வலத்துக்குள் லாரி புகுந்த விபத்தில் 13 பேர் பலி!

ராஜஸ்தான் மாநிலத்தில், திருமண விழா ஊர்வலம் சென்று கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர்.

 ராஜஸ்தான் மாநிலம், பிரதாப்கர்க் மாவட்டத்துக்குட்பட்ட அம்பாவலி கிராமத்தில் உள்ள மண்டபத்தில் திருமண விழா நடைபெற்று வந்தது. இந்த விழாவில் பங்கேற்றவர்கள், பிரதாப்கர்க் -ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் இன்று காலை திருமண ஊர்வலம் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியே வேகமாக வந்து கொண்டிருந்த சரக்கு லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, திருமண ஊர்வலத்திற்குள் புகுந்து பலர் மீது மோதி விபத்துக்குள்ளாக்கியது. இந்த கோர விபத்தில் 9  பேர் சம்பவ இடத்திலும், 4 பேர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலும் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 34 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP