பிரதமர் இல்லத்தின் முன்பு போராட்டம் - சிவராஜ் சௌகானை அழைக்கும் திக்விஜய் சிங்!!

மத்தியபிரதேசம் : மழையினால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்காக அளிக்கப்படும் தொகை அவர்களுக்கு முறையாக சென்று சேருவதில்லை என்ற காரணத்தினால் பிரதமர் இல்லத்தின் முன்பு போராட்டம் மேற்கொள்ள முடிவு செய்திருக்கும் அம்மாநில முன்னாள் முதலமைச்சரான திக்விஜயா சிங், பாஜக கட்சியின் தலைவர் சிவராஜ் சௌஹானயும் தன்னுடன் இணைந்து போராடுமாறு கூறி அழைப்பு விடுத்துள்ளார்.
 | 

மத்தியபிரதேச மாநிலத்தில் மழையினால் பாதிப்புக்குள்ளாகி வரும் விவசாயிகளுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் தொகை அவர்களிடம் சரியாக சென்றடைவதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான திக்விஜயா சிங்.

இதற்கு அம்மாநில முதலமைச்சர் கமல்நாத் சிங் தான் காரணம் என்று பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டுகையில், காங்கிரஸ் கட்சியோ பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தான் தனது பணிகளை சரிவர செய்வதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

இப்படி ஒவ்வொருவரும் மாறி மாறி குற்றம் சாட்டிக் கொண்டிருப்பதனால் விவசாயிகளின் நிலையில் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதை உணர்ந்து தான் இந்த போராட்டத்திற்கு தயாராகி இருப்பதாக கூறும் திக்விஜயா சிங், இந்த போராட்டத்தில் தன்னுடன் இணைந்து பிரதமரிடம் கோரிக்கை வைக்குமாறு பாஜக கட்சியை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சௌஹானிற்கு அழைப்பு விடுத்து ஓர் கடிதம் அனுப்பியுள்ளார்.

மேலும், இருவரும் முன்னாள் முதலமைச்சர்கள் என்பதால், இம்மாநிலத்தின் நலனில் இருவருக்குமே மிகுந்த அக்கரை உள்ளது என்று கூறிய திக்விஜயா சிங், உண்மையான நிலையை எடுத்துக்கூறி முன்வைக்கப்படும் கோரிக்கைகளை பிரதமர் என்றுமே நிராகரிக்க மாட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP