மகளின் சடலம் முன்னாள் கதறி அழுத தந்தை; பூட்ஸ் காலால் எட்டி உதைத்த காவலர் - வைரல் வீடியோ

தெலுங்கானாவில் மகளின் சடலத்தை எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்து கதறி அழுத தந்தையை காவலர் ஒருவர் தனது பூட்ஸ் காலால் எட்டி உதைக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கரெட்டி மாவட்டம் மெலிமெலாவில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் விடுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
 | 

மகளின் சடலம் முன்னாள் கதறி அழுத தந்தை; பூட்ஸ் காலால் எட்டி உதைத்த காவலர் - வைரல் வீடியோ

தெலுங்கானாவில் மகளின் சடலத்தை எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்து கதறி அழுத தந்தையை காவலர் ஒருவர் தனது பூட்ஸ் காலால் எட்டி உதைக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சங்கரெட்டி மாவட்டம் மெலிமெலாவில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர் விடுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதனை ஏற்க மறுத்த மாணவியின் பெற்றோர் தங்களது மகளின் இறப்பில் மர்மம் இருப்பதாக குற்றம்சாட்டினர். கல்லூரி நிர்வாகம் தான் இறப்புக்கு காரணம் என கூறுகின்றனர். இந்நிலையில் கல்லூரியில் ஃப்ரீசரில் வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடலை காவல்துறையிடம் ஒப்படைக்க பெண்ணின் தந்தை எதிர்ப்பு தெரிவித்தார். 


ஃப்ரீசர் பெட்டியை காவல்துறையினர் வேகமாக இழுத்து சென்ற போது, பெண்ணின் தந்தை அவர்களை தடுக்க முயன்றார். அப்போது ஒரு காவலர் மாணவியின் தந்தையை எட்டி உதைத்தார். இதனை ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட, சமான செயலில் ஈடுபட்ட போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் தந்தையிடம் கொடூரமாக நடந்துகொண்ட போலீஸ் அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெலுங்கானா டிஜிபி தெரிவித்துள்ளார்.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP