இஷ்டத்துக்கு செக்ஸ் வெச்சிக்கிட்டு அப்புறம் ரேப் கேஸும் கொடுப்பீங்களோ?...பெண்ணுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்!

எந்தவொரு பெண்ணும், தமது சுயவிருப்பத்துக்காக ஒரு சிறுவனுடன் உடலுறவு கொள்ளக்கூடாது. அதன் பிறகு, ஒருகட்டத்தில் தனது விருப்பம் நிறைவேறாவிட்டால், பாலியல் தொடர்பான சட்டத்தை தவறாக பயன்படுத்துவதையும் அனுமதிக்க முடியாது என நீதிபதி தமது உத்தரவில் தெரிவித்திருந்தார்
 | 

இஷ்டத்துக்கு செக்ஸ் வெச்சிக்கிட்டு அப்புறம் ரேப் கேஸும் கொடுப்பீங்களோ?...பெண்ணுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்!

உத்தரகண்ட் மாநிலம், நைனிடாலை சேர்ந்த 18 வயது நிரம்பாத சிறுவன் ஒருவன், வேலை தேடி 2017 -இல், ஹரியான மாநிலம், குருகிராமம் வந்துள்ளான். அங்கு தங்குமிடத்தில் ஒரு பெண்ணுடன் அவனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இப்பழக்கம் உடலுறவு வைத்துக் கொள்ளும் அளவுக்கு வளர்ந்துள்ளது. ஒருகட்டத்தில் அந்த பெண் சிறுவனுடன் வலுகட்டயாமாக உடலுறவு கொண்டுள்ளார்.

ஏடாகூடமான இந்த விஷயம் மாநில மகளிர் ஆணையத்துக்கு தெரியவர, போலீஸ் முன்னிலையில், சிறுவன் மற்றும் பெண்ணின் உறவினர்கள் முன்னிலையில், சமாதானம் பேசி இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு சம்பந்தப்பட்ட இருவரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இந்த முடிவை முதலில் ஏற்றுகொண்ட சிறுவனின் குடும்பத்தினர், பின்னர் தங்கள் முடிவிலிருந்து பின்வாங்கியதுடன், அப்பெண்ணிடம் ஒரு லட்சம் ரூபாய் பணமும் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெண், சிறுவன் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் மீது குருகிராமம் மகளிர் காவல் நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

 இந்த வழக்கை விசாரித்த சிறுவர்களுக்கான நீதிமன்றம், "வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் தான் சிறுவனுடன் வலுகட்டாயமாக செக்ஸில் ஈடுபட்டுள்ளார். தனது இந்த தகாத செயலால் ஏற்படும் பின்விளைவுகளை அவர் நன்றாகவே அறிவார். எனவே, அவரது இச்செயலால் பாதிக்கப்பட்ட சிறுவன் இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகிறான்.

அத்துடன், எந்தவொரு பெண்ணும், தமது சுயவிருப்பத்துக்காக ஒரு சிறுவனுடன் உடலுறவு கொள்ளக்கூடாது. அதன் பிறகு, ஒருகட்டத்தில் தனது விருப்பம் நிறைவேறாவிட்டால், பாலியல் தொடர்பான சட்டத்தை தவறாக பயன்படுத்துவதையும் அனுமதிக்க முடியாது" என நீதிபதி தமது உத்தரவில் தெரிவித்திருந்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP