டெல்லியில் யாருக்கு அதிகாரம்? - வழக்கு 3வது நீதிபதி அமர்வுக்கு மாற்றம்!

டெல்லியில் துணை நிலை ஆளுநருக்கும், ஆம் ஆத்மி அரசுக்கும் உள்ள அதிகாரங்களை தனித்தனியே குறிப்பிடக்கோரி டெல்லி அரசு தொடர்ந்த வழக்கில், இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கவே, 3வது நீதிபதி அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது.
 | 

டெல்லியில் யாருக்கு அதிகாரம்? - வழக்கு 3வது நீதிபதி அமர்வுக்கு மாற்றம்!

டெல்லியில் துணை நிலை ஆளுநருக்கும், ஆம் ஆத்மி அரசுக்கும் உள்ள அதிகாரங்களை தனித்தனியே குறிப்பிடக்கோரி டெல்லி அரசு தொடர்ந்த வழக்கில், இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கவே, 3வது நீதிபதி அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது.

டெல்லியில் மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்ட துணை நிலை ஆளுநருக்கும், மக்களால் நியமிக்கப்பட்ட ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் வெடித்து வருகிறது. இது தொடர்பான வழக்கில், 'டெல்லியில் துணை நிலை ஆளுநருக்கு தான் அதிகமான அதிகாரம்' உள்ளது என டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 2016 ஆகஸ்ட் 6ம் தேதி தீர்ப்பளித்தது.

டெல்லி உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கியது.

நீதிபதி தீபக் மிஸ்ரா தீர்ப்பில், துணை நிலை ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது. அமைச்சரவையின் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு தான் ஆக வேண்டும். அதே நேரத்தில் ஆளுநரும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும். மக்களின் திட்டங்கள் குறித்து முடிவு எடுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதேபோன்று நிலம் ஒதுக்கீடு குறித்து ஆளுநர் முடிவெடுக்கலாம். எனவே, மக்கள் நலன் கருதி இரு தரப்பினரும் ஒன்றாக செயல்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

டெல்லியில் யாருக்கு அதிகாரம்? - வழக்கு 3வது நீதிபதி அமர்வுக்கு மாற்றம்!

ஆனால், நீதிபதி சந்திரசூட் தீர்ப்பில், 'டெல்லி அரசுப்பிரதிநிதிகள் மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர்கள். எனவே அமைச்சரவையின் முடிவுகளில் ஆளுநர் தலையிட முடியாது. ஆளுநரை விட அரசுக்கு அதிகாரமும், பொறுப்பும் அதிகமாக உள்ளது.  உண்மையான அதிகாரமும், கணிசமான பொறுப்புகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடமே அளிக்கப்படுகின்றன. எனவே அரசின் செயல்பாடுகளுக்கு ஆளுநர் முட்டுக்கட்டை போட இயலாது. அரசின் முடிவுகளுக்கு ஆளுநர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இறுதியில் தீபக் மிஸ்ரா உள்பட 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் 'டெல்லி அரசுக்கே அதிகாரம்' என்று தீர்ப்பளிக்க அதுவே இறுதித் தீர்ப்பாக எடுத்துக்கொள்ளப்படும் என தீபக் மிஸ்ரா தெரிவித்தார். 

இந்த வழக்கின் தீர்ப்பில் பல்வேறு குழப்பங்கள் உள்ளதாக டெல்லி அரசு சார்பில் மீண்டு உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு அளித்தது. அதன்படி, ' மக்கள் தொடர்பான திட்டங்களை ஆளுநர் கையெழுத்திடாமல் கிடப்பில் போட்டுள்ளார். எனவே எந்தெந்த துறையை அரசு கவனிக்க வேண்டும், எந்தெந்த துறைகளில் ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்று முறையாக தனித்தனியே குறிப்பிட வேண்டும். குறிப்பாக லஞ்சஒழிப்புத்துறை யார் கையில் இருக்க வேண்டும்?' என்றெல்லாம் அந்த மனுவில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

டெல்லியில் யாருக்கு அதிகாரம்? - வழக்கு 3வது நீதிபதி அமர்வுக்கு மாற்றம்!

சேவைகளை பிரிப்பது தொடர்பான இந்த மனு மீதான விசாரணை இன்று முடிவடைந்த நிலையில், நீதிபதி ஏ.கே.சிக்ரி மற்றும் நீதிபதி  அசோக் பூஷன் இன்று தங்களது தீர்ப்பை வாசித்தனர். 

நீதிபதி ஏ.கே.சிக்ரி தெரிவிக்கையில், "லஞ்ச ஒழிப்புத்துறை ஆளுநர் கையில் தான் இருந்தால் தான் சரியாக இருக்கும். இல்லையென்றால் அது பல்வேறு சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை ஏற்படுத்தும். அதேபோன்று இணை செயலர் மற்றும் அதற்கு மேலான பதவிகளை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கே உள்ளது" என்று கூறினார். 

அதே நேரத்தில், நீதிபதி அசோக் பூஷன், சேவைகள் தொடர்பான அனைத்தையும் டெல்லி அரசிடம் தான் கொடுக்க வேண்டும். அப்போது தான் மக்களுக்கு உடனடியாக அனைத்தும் கிடைக்கும்" என்றார். 

இருவரும் மாறுபட்ட தீர்ப்பை அளித்திருப்பதால் வழக்கு 3வது நீதிபதிக்கு மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. 3வது நீதிபதி தீர்ப்பு வழங்கியபிறகு. மெஜாரிட்டி அடிப்படையில் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP