'என்ன நடக்குது இங்கே?': சிறுமிகள் வன்கொடுமை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி!

பீகாரின் முசாபர்பூர் நகரில், பாதுகாப்பு இலத்தில் இருந்த சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையை பார்த்த உச்ச நீதிமன்றம், "பீகார் அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது" என கேள்வி எழுப்பியுள்ளது.
 | 

சில மாதங்களுக்கு முன், பீகாரின் முசாபர்பூரில், பிரிஜேஷ் தாகூரின் தொண்டு நிறுவனம் நடத்தி வந்த குழந்தைகள் இல்லத்தில் உள்ள சிறுமிகள் வன்கொடுமை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்து, மும்பை டாட்டா சமூக சேவை கல்லூரி நடத்திய விசாரணையில், அங்குள்ள 34 சிறுமிகள் வன்கொடுமை செய்யப்பட்டதாக தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

தொண்டு நிறுவனத்தின் தலைவர் பிரிஜேஷ் தாகூர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. விசாரணை குறித்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தனது அறிக்கையை தாக்கல் செய்தது. அதை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச், "குற்றங்கள் நடந்த விதம் மிகவும் மோசமாகவும், கொடூரமாகவும் உள்ளது. பீகார் அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது?" என கேள்வி எழுப்பினர். 

வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தாகூரின் சிறையில் இருந்து சமீபத்தில் ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. "பீகாரில் இவ்வளவு செல்வாக்கு கொண்ட தாகூரை ஏன் வெளி மாநில சிறைக்கு மாற்ற கூடாது" எனவும் நீதிபதிகள் வினவினர். 

வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மற்றொருவரான, சந்திர சேகர் வர்மா ஏன் கைது செய்யப்படவில்லை என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இவர், முன்னாள் பீகார் அமைச்சர் மஞ்சு வர்மாவின் கணவராவார். சமுக நலத்துறை அமைச்சராக இருந்த மஞ்சு ஷர்மா, சிறுமிகள் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தினால் ஏற்பட்ட நெருக்கடியால் தனது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP