இரு மாநிலங்களில் போலி வாக்காளர்கள் என புகார் கூறிய காங்கிரஸ் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் போலி வாக்காளர்கள் இருப்பதாகக் கூறி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கமல்நாத் மற்றும் சச்சின் பைலட் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
 | 

இரு மாநிலங்களில் போலி வாக்காளர்கள் என புகார் கூறிய காங்கிரஸ் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் போலி வாக்காளர்கள் இருப்பதாகக் கூறி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கமல்நாத் மற்றும் சச்சின் பைலட் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் 28-ஆம் தேதியிலும், ராஜஸ்தானில் டிசம்பர் மாதம் 7-ஆம் தேதியிலும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆளுங்கட்சியாக உள்ளது. இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் ஏராளமான போலி வாக்காளர்கள் இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. 

இதுதொடர்பாக மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் கமல் நாத்தும், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு எந்திரங்களை அங்கொன்றும், இங்கொன்றுமாக ஆய்வு செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த மனு மீது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 8ம் தேதி இறுதி விசாரணை நடைபெற்றது. இதையடுத்து அந்த மனு மீது நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர். அப்போது மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP