உச்சநீதிமன்ற நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொண்டதில் தவறில்லை

பிரதமர் நரேந்திர மோடி உச்சநீதிமன்றத்திற்கு சென்று அங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் எந்த தவறும் இல்லை என முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மதன் பி லோகுர் தெரிவித்துள்ளார்.
 | 

உச்சநீதிமன்றத்திற்கு பிரதமர்‌ மோடி சென்றதில் அரசியல் இருப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன. இதற்கு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மதன் பி லோகுர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அதில், பிரதமர் மோடி உச்சநீதிமன்றத்திற்கு சென்றதில் எந்த தவறும் இல்லை என்றும் வங்கதேசம், பூடான் மியான்மர், நேபாள், தாய்லாந்து ஆகிய நாடுகளின் நீதிபதிகள் கலந்து கொண்ட விருந்து நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடிக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அழைப்பு விடுத்திருந்தார்.

அதன் பேரில் பிரதமர் மோடி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மதன் பி லோகுர் தெரிவித்துள்ளார்.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP