மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்த கணவருக்கு எதிராக வழக்கு

தலாக், தலாக், தலாக் என மூன்று முறை கூறி, மனைவியை விவாகரத்து செய்ததாக அறிவித்த, கணவருக்கு எதிராக, அவரது மனைவி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், கணவரின் செயல், உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
 | 

டெல்லியை சேர்ந்த, 32 வயது முஸ்லிம் பெண் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: 
‛‛கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் எனக்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன நாள் முதலே, என் கணவரும், கணவர் வீட்டாரும் என் பிறந்த வீட்டு வறுமை நிலையை சுட்டிக் காட்டி, என்னை துன்புறுத்தி வந்தனர். 

எனக்கு, இரு குழந்தைகள் உள்ளனர். குழந்தைகள் நலன் கருதி, அத்தனை கொடுமைகளையும் பொறுத்துக் கொண்டு கணவர் வீட்டிலேயே வாழ்ந்து வந்தேன். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம், என்னை அடித்து,  உதைத்து, வரதட்சணை வாங்கி வரச் சொல்லி, வீட்டை விட்டு வெளியேற்றினர். 

மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்த கணவருக்கு எதிராக வழக்கு

அதன் பிறகு, முத்தலாக் கூறி, என்னை விவாகரத்து செய்துவிட்டதாக என் கணவர் கூறினார். அது குறித்த நோட்டீசையும் அனுப்பினார். என் கணவரின் இந்த செயல், முத்தலாக் முறையில் விவகாரத்து செய்வது செல்லாது என தீர்ப்பளித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும்.

எனவே, முத்தலாக் முறையில் அறிவிக்கப்பட்ட விவாகரத்து செல்லாது என அறிவிப்பதோடு, என்னை கொடுமைபடுத்தி வரும், கணவர் மற்றும் அவரது வீட்டார் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என, அந்தப் பெண் தன் புகாரில் தெரிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP