கணினி கண்காணிப்பு: மத்திய அரசுக்கு உத்தரவு 

தனி நபர் கணினி பயன்பாட்டை கண்காணிக்க, சி.பி.ஐ., உள்ளிட்ட அமைப்புகளுக்கு அனுமதி அளித்தது குறித்து, ஆறு வாரங்களுக்குள் பதில் அளிக்கும் படி, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 | 

கணினி கண்காணிப்பு: மத்திய அரசுக்கு உத்தரவு 


 

தனி நபர் கணினி பயன்பாட்டை கண்காணிக்க, சி.பி.ஐ., உள்ளிட்ட அமைப்புகளுக்கு அனுமதி அளித்த, மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, ஆறு வாரங்களுக்குள் பதில் அளிக்கும் படி, அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு விசாரைண, ஆன்லைன் முறைகேட்டை தடுப்பது, நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வது உள்ளிட்ட காரணங்களுக்காக, அனைத்து வகை கணினி பயன்பாட்டையும் கண்காணிக்க, சி.பி.ஐ., அமலாக்கத்துறை, உளவுத்துறை உள்ளிட்ட, 10 அமைப்புகளுக்கு, டிச., 20ல் மத்திய அரசு அனுமதி அளித்தது. 

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், தனி நபர் உரிமைகளும், சுதந்திரமும் பறிக்கப்படும் அபாயம் உள்ளதாக, உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது குறித்து, ஆறு வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP