அயோத்தி வழக்கில் மத்தியஸ்தர் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு

அயோத்தி வழக்கில் சமரசத் தீர்வை எட்டுவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி எஃப்.எம்.கலிபுல்லா தலைமையில் மத்தியஸ்தர் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த மூவருமே தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 | 

அயோத்தி வழக்கில் மத்தியஸ்தர் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு

அயோத்தி வழக்கில் சமரசத் தீர்வை எட்டுவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி எஃப்.எம்.கலிபுல்லா தலைமையில் மத்தியஸ்தர் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்தக் குழு, தனது பணிகளை 4 வாரங்களுக்குள் தொடங்க வேண்டும் என்றும், சமரச நடவடிக்கையை 8 வாரங்களில் முடிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மத்தியஸ்தர் குழுவில் இடம்பெற்றுள்ள மூவரும் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தை சொந்தம் கொண்டாடுவது தொடர்பாக, நிர்மோஹி அரோரா, ராம் லல்லா, சன்னி வஃபு வாரியம் ஆகிய மூன்று பிரிவினரிடையே சிக்கல் நீடித்து வருகிறது. இதுதொடர்பான வழக்கை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், சமரசத் தீர்வை எட்டுவது தொடர்பாக, நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் மத்தியஸ்தர் குழுவை அமைக்க பரிசீலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அதற்கான உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற நீதிபதி எஃப்.எம்.கலிஃபுல்லா (குழுத் தலைவர்), ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், பைசாபாதில் வைத்து சமரச நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதை கேமிராவில் பதிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமரச நடவடிக்கையை 8 வாரங்களில் முடிக்க வேண்டும் என்றும், அதுதொடர்பாக ஊடகங்கள் செய்தி வெளியிடக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP