அயோத்தி பயங்கரவாதத் தாக்குதல் வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் கடந்த 2005 -இல் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் வழக்கில், நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பிரயாக்ராஜ் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
 | 

அயோத்தி பயங்கரவாதத் தாக்குதல் வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் கடந்த 2005 -இல் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் வழக்கில், நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பிரயாக்ராஜ் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக,  இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ஆறு பேர்  அடைக்கப்பட்டுள்ள சிறையிலேயே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2005 - ஆம் ஆண்டு ஜூலை 5 -ஆம் தேதி, ஜெய்ஷ் -இ -முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த  ஒரு குழுவினர், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய ராம ஜென்ம பூமி -பாபர் மசூதி இடத்துக்குள் யாத்திரிகள் வேடத்தில் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டது. இத்தாக்குதலில் சுற்றுலா வழிகாட்டியான ரமேஷ் பாண்டே உட்பட இருவர் உயிரிழந்தனர்.

பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் ஜெய்ஷ் -இ- முகமது அமைப்பைச் சேர்ந்த 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இர்ஃபான், முகமது சஹீல், ஆசிஃப் இக்பால் உள்ளிட்ட அந்த அமைப்பைச் சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை  விதித்தும், ஒருவரை வழக்கிலிருந்து விடுவித்தும்  நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP