உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் பாப்டே!

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 | 

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் பாப்டே!

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ரஞ்சன் கோகாயின் பதவிக்காலம் வரும் நவ.17ஆம் தேதியுடன்  நிறைவடைகிறது. இவர் கடந்த 2018 அக்டோபர் 3 ஆம் தேதி முதல் பதவி வகித்து வருகிறார். இவர் தற்போது அயோத்தி விவகார வழக்கை விசாரித்து வருகிறார். இவர் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, அடுத்து தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே என்பவரை நியமனம் செய்ய பரிந்துரைத்திருந்தார். இந்நிலையில், ரஞ்சன் கோகாயின் பரிந்துரையை ஏற்ற குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் எஸ்.ஏ.பாப்டேவை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளார். நவ18ஆம் தேதி புதிய தலைமை நீதிபதியாக சரத் அரவிந்த் பாப்டே பதவியேற்பார் என தெரிகிறது. 

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP