சபரிமலை விவகாரம்: 19 மறுசீராய்வு மனுக்கள் 13ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரணை

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து பல்வேறு தரப்பில் தாக்கல் செய்துள்ள மறுசீராய்வு மனுக்கள் அனைத்தும் நவம்பர் 13ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
 | 

சபரிமலை விவகாரம்: 19 மறுசீராய்வு மனுக்கள் 13ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரணை

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து பல்வேறுத் தரப்பில் தாக்கல் செய்துள்ள மறுசீராய்வு மனுக்கள் அனைத்தும் நவம்பர் 13-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. 

சபரிமலைக்கு எல்லா வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மாநிலம் முழுவதும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது. பம்பை, நிலக்கல்மற்றும் சன்னிதானப் பகுதிகளில் பக்தர்கள் நின்று கொண்டு ,ஐயப்பனை தரிசிக்க வரும் பெண்களை தடுத்து நிறுத்தினர். இதில் போராட்டக்காரர்களும், கோயிலுக்கு செல்ல முயன்ற பெண் பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர்.

இந்நிலையில் சித்திரை ஆட்ட விசேஷத்தை முன்னிட்டு இன்று மாலை 5.30 மணி முதல் நவம்பர் 6 இரவு 10.30 மணிவரை சபரிமலை  ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. மீண்டும் நடைதிறக்க இருப்பதால் பலர்  போரட்டத்தில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. இதனால் ஏற்கெனவே கலவரம் ஏற்பட்ட பம்பை , நிலக்கல், இல்வுங்கல் மற்றும் சன்னிதானம் பகுதிகளில்144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் மறு சீராய்வு மனுத்தாக்கல் செய்துள்ளனர். நாயர் சர்வீஸ் சொசைட்டி, ஐயப்ப சேவா சங்கம், பிரமாணர் சங்கம், ஐயப்பா சேவா சமாஜம் உள்ளிட்ட அமைப்புகள் இந்த மனுக்களை தாக்கல் செய்தன. இவற்றை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. 

இந்த நிலையில் தலைமை நீதிபதி ரஞ்ஜன் கோகாய், நீதிபதி எஸ்.கே கவுல் மற்றும் கே.எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, மறு சீராய்வு மனுக்கள் வரும் நவம்பர் 13-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. 

இதில் ஏற்கெனவே அவசர வழக்காக விசாரிக்க வலியுறுத்திய மாத்யூ நெடும்பரா, தேசிய ஐயப்பா பக்தர்கள் குழு (பெண்கள் பிரிவு)  ஆகியோர்கள் உள்ளிட்ட மொத்தம் 19 மனுக்கள் ஒன்றாக விசாரிக்கப்படுகிறது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP