ஸ்ரீநகர் செல்ல மெகபூபா மகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

ஜம்மு- காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபாவை சந்திக்க ஸ்ரீநகர் செல்ல அவரது மகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
 | 

ஸ்ரீநகர் செல்ல மெகபூபா மகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

ஜம்மு- காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபாவை சந்திக்க ஸ்ரீநகர் செல்ல அவரது மகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து திரும்பபெறப்பட்டதை தொடர்ந்து காஷ்மீரில் வன்முறைகள் ஏற்படாமல் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது காஷ்மீரில் பதற்றம் குறைந்ததையடுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது. இருப்பினும், மற்ற மாநிலங்களில் இருந்து ஸ்ரீநகர் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஜம்மு- காஷ்முர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தியின் மகள் இல்திஜா ஸ்ரீநகரில் உள்ள தனது தாயை சந்திக்க அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவர் ஸ்ரீநர் சென்று அவரது தாயை சந்திக்க அனுமதி வழங்கியுள்ளது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP